அப்படி என்ன இருக்கு இந்த பில்லா-2வில்? சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக்!

13 July 2019 சினிமா
billa2.jpg

2012ம் ஆண்டு, மங்கத்தா ஹிட்டான பிறகு, அஜித்தின் ரசிகர்கள் பரம மகிழ்ச்சியில் இருந்த மற்றொரு பிரம்மாண்டமான நாள், ஜூலை 13ம் தேதி, அஜித் குமாரின் படமான பில்லா 2 வெளியான நாள்.

அப்படத்தின் சக்ரி டோலெட்டி இயக்கியிருந்தார். படத்தினை வைஸ் சிட்டி கேமினை மனதில் வைத்து, எடுத்து இருந்ததாக, அவர் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார்.

அஜித்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான, பில்லா படத்தின் பிரீக்குவல் தான் இந்த பில்லா-2. டேவிட் பில்லா எப்படி, நிழல் உலகை ஆளும் தாதாவாக மாறி, பின் டானாக மாறினான் என்பது தான் படத்தின் கதை. அன்றையக் காலக்கட்டத்தில், இப்படம் 2000க்கும் அதிகமானத் திரையறங்குகளில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. சும்மாவே, அஜித்தின் ரசிகர்கள் கெட்ட ஆட்டம் போடுவார்கள். இந்த மாதிரி 2000 திரையறங்கில் படம் வெளியாகிறது என்றால், சும்மா விடுவார்களா! வீதிக்கு வீதி பேனர்கள், போஸ்டர்கள் என, இப்படத்தை பட்டித் தொட்டி எங்கும் கொண்டாட ஆரம்பித்தனர்.

படத்தில் வித்யுத் ஜம்வால் அறிமுகமானார். படத்தின் கதையும், ஒளிப்பதிவும் ஹாலிவுட் லெவல் என்றால், சண்டைக்காட்சிகள் அதற்கும் மேல். இருப்பினும், இது தமிழ் ரசிகர்களின் மனதைக் கவரத் தவறியது. நாட்கள் சென்ற பின், இப்படத்தினை ஏற்றுக் கொண்டனர். இப்படத்திற்கும் தலயின் தீவிர ரசிகரான, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

படத்தில் ஹெலிகாப்டர் ஒன்றில் சண்டைக்காட்சி நடக்கும். அதில் அஜித்குமாரே, எவ்வித டூப்பும் இல்லாமல், தானே செய்து அசத்தினார். அன்று முதல் இன்று வரை, அவர் நடிக்கும் படங்களில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு, டூப் பயன்படுத்துவதில்லை.

படத்தில் ஈழத் தமிழராக வரும் அஜித் பேசும் வசனங்கள், இன்றும் அனல் பறக்கும் வகையில் எழுதப்பட்டவை. நாங்க அகதிங்க தான்! அனாதை இல்ல! என்ற பஞ்ச் டயலாக்கை கொண்டாடாத ஈழ அகதிகள் கிடையாது.

தற்பொழுது இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. இதனை அஜித்குமாரின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS