நிர்வாணமாக நடிக்கத் தயார்! பிரபல நடிகை ஓபன் டாக்!

18 March 2020 அரசியல்
bindhumadhavi.jpg

தமிழ் சினிமாவில் பட வாய்ப்பிற்காக, பல நடிகைகள் தற்பொழுது ஆபாசமாக நடித்து வருகின்றனர். முதலில், கிராமத்துக் கதைகளில் நடிக்க ஆரம்பித்து, ஹோம்லி கேர்ள்ளாக மாறி, பின்னர் அல்ட்ரா மாடர்னாக நடிப்பது தான், கோலிவுட் நடிகைகளின் வழக்கம்.

நடிகை நயன்தாரா முதல், அனுஷ்கா வரை, அனைவருமே அந்தப் பாணியில் தான் முன்னணிக்கு வந்தனர். இந்நிலையில், தற்பொழுது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நடிகைகள், தங்களுடைய கவர்ச்சியின் மூலம், பட வாய்ப்புகளைப் பெற முயற்சித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், அமலா பால் ஆடை என்றப் படத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வரவேற்பினைப் பெற்றது. இந்நிலையில், அவரைப் பின் தொடர்ந்து, பலரும் அதே பாணியினைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தற்பொழுது ஒரு விபரீத முடிவினை எடுத்துள்ளாராம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதனால், தற்பொழுது கவர்ச்சிக்கு க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தனக்கு ஏற்ற வகையில், கதை அமைந்தால் அமலாபால் போல் ஆடை படம் போன்ற கதை அமைந்தால், அவரைப் போன்று நடிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது பெரிய பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS