சந்தானம், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ரதன் இசையில், ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிஸ்கோத். இந்தப் படமானது, முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டு உள்ளது.
நல்ல வேளை இந்தப் படம், இந்த சமயத்தில் வெளியானது. வேறு வழியில்லாமல், வேண்டுமென்றால் ரசிகர்கள் இந்தப் படத்தினைப் பார்க்கலாம். அதைத் தவிர்த்து, இந்தப் படம் சாதாரணமான நாட்களில் வெளியானால், கண்டிப்பாக கழுவி ஊற்றப்பட்டு இருக்கும். அந்த அளவிற்கு, படு மோசமாக உருவாக்கப்பட்டு உள்ளது. படம் முழுக்க காமெடி என நினைத்து, நீங்கள் படம் பார்க்க ஆரம்பிப்பீர்கள். ஆனால், படம் முழுக்க, சந்தானம் தொடர்ந்து மற்றவர்களைக் கலாய்க்கின்றார். பேசிக் கொண்டே இருக்கின்றார்.
அவ்வளவு தான். படம் முடிந்துவிடும். சந்தானத்தின் தந்தையும், ஆனந்த்ராஜ் ஆகியோர் இணைந்து பிஸ்கட் கம்பெனி ஆரம்பிக்கின்றனர். இதில், சந்தானத்தின் தந்தை மரணமடைகின்றார். ஆனந்த்ராஜ் அந்தக் கம்பெனியினை, வளைத்து விடுகின்றார். அந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேரும் சந்தானம், பிறகு என்ன செய்தார், அவருடையக் காதலியினை கரம் பிடித்தாரா, ஆனந்த் ராஜினை வீழ்த்தினாரா என்பது தான், படத்தின் மீதிக் கதை.
சொல்லிக் கொள்ளும் அளவிற்கெல்லாம் ஒன்னும் ஸ்பெஷலாக இல்லை. மொக்கையான பாடல்கள், வழக்கம் போல காமெடி என்ற பெயரில், சந்தானத்தின் மொக்கைகள், கணிக்கக் கூடியக் கதை என, படம் போரிங்காக செல்கின்றது. ஆங்கிலத்தில் வெளி வந்த படமான பெட் டைம் ஸ்டோரிஸ் திரைப்படத்தினை, அப்படியே எடுத்தால் மாட்டிக் கொள்வோமென, சற்று மாற்றி எடுத்திருக்கின்றார் இயக்குநர். கதை சொல்லும் பாட்டியாக சௌக்கார் ஜானகி வருகின்றார். அவருடையக் கதைகளில் வரும் ஹீரோக்களாக, சந்தானமே நடித்துள்ளார்.
படத்தில் மற்றப்படி, சொல்லுக் கொள்ளும் படி ஒன்றுமில்லை. மொத்தத்தில் பிஸ்கோத் மாமா பிஸ்கோத்து.