இன்று உலகளவில் அனைத்து நாட்டு மக்களாலும் பயன்படுத்தப்படும் பொதுவான ஒரு பணமாக இந்த பிட்காயின் மாறி வருகிறது. இதைப் பல நாடுகள் எதிர்த்தாலும் இதனை ஏற்றுக் கொண்ட நாடுகளும் கணிசமாக உயர்ந்து வருகின்றன என்பது மறைக்க முடியாத உண்மை ஆகும்.
பிட்காயின் என்றால் என்ன?பொதுவாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு விதமான பணத்தைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக இந்தியா ரூபாய்யைப் பணமாகப் பயன்படுத்துகின்றது. அதேப் போல் ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமானப் பணத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பணம் அனுப்பும் போது அந்தந்த நாட்டிற்கு ஏற்ப வரி விகிதம் மாறுபடுகிறது. ஆனால், இந்த வரி விகிதம் இது ஒரு தலைவழியாக மட்டுமே மக்களுக்கு இருந்து வருகிறது. மேலும் அதிகளவிலான வரி மக்களால் சுமையாகவேப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு விடையாக வந்தது தான் இந்த பிட்காயின்.
இது ஒரு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட டிஜிட்டல் பணம் ஆகும். இதனை சாதரணமாக நம்மால் வெறும் கையால் பயன்படுத்த இயலாது. முற்றிலும் கணிணியில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாகும்.
எவ்வாறு இது செயல்படுகிறது?இது"பிளாக்செயின்" என்ள தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிட்காயினைப் பயன்படுத்தி நம்மால் நேரடியாக பணப்பரிமாற்றம் செய்ய இயலும். மேலும், இது எந்த ஒரு அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்த இயலாத ஒரு அமைப்பாக செயல்படுகிறது. இதனைப் பிளாக் செய்ய இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எந்த ஒரு நாடும் எடுக்கவில்லை. பல நாடுகள் இதனை எதிர்த்தாலும் இதனை எந்த நாடும் தடை செய்யவில்லை என்பதே உண்மை.
எவ்வாறு பணப்பரிமாற்றம் செய்வது?"Wallet" எனப்படும் ஒரு வகை பிட்காயின் சேமிக்கும் வசதியின் மூலம் நம்மால் பிட்காயினைச் சேமிக்க இயலும். பல வலைதளைங்கள் இதற்காக இலவச சேவையை அளிக்கின்றன. எனினும், ஒரு சில வலைதளைங்களே நம்பத் தகுந்தவையாக உள்ளன. மேலும் இவை வங்கிகளைக் காட்டிலும் குறைந்த அளவிலான கமிஷனையேப் பணப்பரிமாற்றத்திற்கு எடுத்துக் கொள்கின்றன என்பதால், மக்கள் அதிகளவில் இதனைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
எப்படி பிட்காயின் பெறுவது?
"பிளாக்செயின்" எனப்படும் வலைதளம் போன்று நிறைய வலைதளங்களில் அந்தந்த நாட்டின் பணமதிப்பிற்கு ஏற்ப பிட்காயினை வாங்கவும் விற்கவும் செய்யலாம்.
மேலும், பிட்காயின் மைனிங் (bitcoin mining) எனப்படும் ஒரு வித வேலையின் மூலமும் நம்மால் பிட்காயினைப் பெற இயலும். அதேப் போன்று பாஃசட் (bitcoin faucet) எனப்படும் வலைதளங்கள் மூலமும் நம்மால் எளிதாகப் பிட்காயினைச் சம்பாதிக்க இயலும்.நம் இந்திய அரசாங்கம் இந்த வகைப் பணப்பரைமாற்றத்திற்கு தடை விதிக்கவில்லை என்றாலும் அதனைக் கடுமையாக எதிர்க்கிறது.
எதிர்ப்பிற்கான காரணங்கள்கள்ளச்சந்தைகளில் இந்தவகைப் பணத்தையே அனைவரும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த வகைப் பணப்பரிமாற்றத்தை கண்டறிந்து தடுப்பது என்பது கடலில் குண்டூசியைத் தேடுவதற்குச் சமம் ஆகும்.
இந்த வகைப் பணத்தால் எதிர்காலத்தில் நாட்டின் வர்த்தகமும் பண மதிப்பும் கடுமையாகப் பாதிக்கும் என்ற அச்சத்தாலும் இதனை நம் நாடுக் கடுமையாக எதிர்க்கிறது.
எவ்வாறு இருப்பினும், பில்கேட்ஸ் போன்ற உலகின் பெரும் பணக்கார்கள் இந்த வகைப் பணப்பரிமாற்றமே உலகின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளதாக நம்புகின்றனர்.