உலகளவில் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பணமாக, தற்பொழுது பிட்காயின் மாறியுள்ளது. இதற்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவும் தடை விதித்தன. இதனால், அதனைப் பயன்படுத்தும் பலரும் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.
இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, பயனர்கள் முதலீடு செய்யப்பட்டு இருந்ததால், என்ன செய்வது என்றுத் தெரியாமல் விழிபிதுங்கி இருந்தனர். மேலும், தற்பொழுது பிட்காயின் ஒன்றின் மதிப்பானது, 6,50,000 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கையில் உள்ள பிட்காயினை எவ்வாறு பயன்படுத்துவது எனக் கலக்கத்துடன் காணப்பட்டனர்.
இவைகளைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம், பிட்காயின் பயன்பாட்டிற்கு, அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய அரசும், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் தடையினை ரத்து செய்தது.