உலகளவில் தற்பொழுது வெகுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பணமாக, பிட்காயின் மாறி வருகிறது. இதைப் போன்று பல கிரிப்டோகரண்சிகள், எனப்படும் பணம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பிட்காயினுக்கு போட்டி என யாரும் இல்லை. அந்த அளவிற்கு பிட்காயின் சகஜமாக புழங்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில், தற்பொழுது ஒரு பிட்காயினின், மதிப்பு 4,25,000 ரூபாயை தாண்டியுள்ள நிலையில், 7,000க்கும் அதிகமான பிட்காயின் ஹேக்கர்களால் ஆன்லைனில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 40 மில்லியன்.
இந்த அளவிற்குப் பணத்தைக் கொள்ளை அடிக்க, பிஷ்சிங் என்ற ஹேக்கிங் முறையை, ஹேக்கர்கள் பயன்படுத்தி உள்ளனர். இதன் காரணாமக, பயனர்கள், எளிதாக ஏமாந்து உள்ளனர். இவ்வாறு திருட்டப்பட்டுள்ளது, பிட்காயினின் மொத்த அளவில் 2% என்பது குறிப்பிடத்தக்கது