பாஜகவில் இணைந்துள்ள அண்ணாமலை, அதிமுகவும் பாஜகவும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதாக தெரிவித்து உள்ளார்.
நேற்று, திருச்சியில் நடைபெற்ற முத்தரையில் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், திமுகவில் குடும்ப அரசியல் மிதமிஞ்சி இருக்கின்றது. அதிமுகவும் பாஜகவும் நல்ல கூட்டணி ஆகும். இரண்டும் ஒரே நேர்கோட்டில் தான் பயணிக்கின்றன.
பெண்களுக்கு எதிரானப் பிரச்சனைகளில், மத்திய அரசு நல்ல விதத்தில் தான் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி புரிகின்றார். எங்களுடையக் கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை. தற்பொழுது உள்ள சூழ்நிலையில், தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி விட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.