இது மேக் இன் இந்தியா இல்லை. ரேப் இன் இந்தியா! ராகுலுக்கு பாஜகவினர் கண்டனம்!

13 December 2019 அரசியல்
rahul.jpg

தற்பொழுது இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது ராகுல் காந்தியின் பேச்சு. நேற்று மேடையில் பேசும் பொழுது, மோடி மேக் இன் இந்தியா எனக் கூறி வருகின்றார். ஆனால், உண்மையில் அது ரேப் இன் இந்தியாவாக மாறியுள்ளது என்றார்.

இப்பொழுதெல்லாம் இந்தியாவின் எந்தப் பக்கம் திரும்பினாலும், கற்பழிப்புப் புகார்கள் அதிகமாக குவிகின்றன. ஏன், உத்திரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர், ஒரு பெண்னை கற்பழித்து விட்டார். ஆனால், அந்தப் பெண் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார். இது பற்றி, பிரதமர் நரேந்திர மோடி வாயைத் திறக்கவே இல்லை. தொடர்ந்து, மவுனம் காத்து வருகின்றார் எனக் கூறினார்.

இதனையடுத்து இன்று அந்தப் பேச்சு, பரபரப்பினைக் கிளப்பியுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்த பாஜக அமைச்சர் ஸ்மிருதி இராணி, ராகுல் காந்தி கண்டிப்பாக இந்தப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு தலைவர் நாட்டிலுள்ள பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனைத் தான், அவர் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றாரா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த கனிமொழி, ராகுல் காந்தி எவ்விதத் தவறான அர்தத்திலும் பேசவில்லை. அவர் நாட்டில் பெண்களின் நிலைமையையே பேசினார் என்றுத் தெரிவித்தார். ராகுல் காந்திப் பேசியதை புரிந்து கொள்ளாத எம்பிக்கள் பலரும், ராகுல் காந்தி, பெண்களை ரேப் செய்ய கூறியுள்ளார் என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வடகிழக்கு இந்தியாவில் நடைபெற்று வரும் போராட்டத்தினை திசை திருப்ப என் மீது தேவையற்ற களங்கத்தை உருவாக்குகின்றனர். நான் கண்டிப்பாக, மன்னிப்புக் கேட்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், டெல்லியினை ரேப் கேப்பிட்டல் என மோடி ஏற்கனவேத் தெரிவித்து இருந்தார். அதனை என்னுடைய போனில் வைத்து இருக்கின்றேன். அப்பொழுது அவர் என்ன தெரிவிக்க விரும்புகின்றார் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

HOT NEWS