சரத் பவார் பல்டி! ஆட்சியைப் பிடித்த பாஜக! மஹாராஷ்டிராவில் அதிரடி அரசியல்!

23 November 2019 அரசியல்
devendrafadnaviscm.jpg

இந்தியாவிலேயே தமிழகத்தின் தான், ஒரு தேர்தலை நடத்தி மூன்று பேர், முதல்வராக இருந்து இருக்கின்றனர். அதுவும் இப்பொழுது தான். அந்த அளவிற்கு தமிழக அரசியலில் பெரிய குழப்பங்கள் இருந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், இடியாப்ப சிக்கலைப் போன்று உள்ளது மஹாராஷ்டிரா அரசியல். நேற்று இரவு வரை, மஹாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளித்து வந்த சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியானது, இன்று காலையில் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் விரக்தியில் உள்ளனர்.

சரத் பவாரின் ஆதரவினை அடுத்து, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மஹாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை இந்தியாவில் உள்ள எவரும் நம்பவில்லை. இருப்பினும், பாஜக தலைவர்கள் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மஹாராஷ்டிராவில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தேவேந்திர பட்னாவிஸ், மஹாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோசியாரியிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து, அவசர அவசரமாக பதவிப் பிரமாணம் இன்று காலையில் நடைபெற்று உள்ளது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றது சிவ சேனா. பதவியேற்பு முடிந்ததும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தேவேந்திர பட்னாவிஸ், மஹாராஷ்டிராவிற்கு நிலையான அரசே தேவை. கிச்சடி அரசாங்கம் தேவையில்லை. தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவளித்த மக்கள் வாக்களித்தார்கள் எனக் கூறியுள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

HOT NEWS