டெல்லி தேர்தல் பாஜகவின் வாக்குறுதிகள்! ஈ ஸ்கூட்டர், சுத்தமான குடிநீர், இரண்டு லட்ச ரூபாய்!

02 February 2020 அரசியல்
devendrafadnavisdelhi.jpg

டெல்லியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, பாஜக கட்சியினரும், ஆம் ஆத்மி கட்சியினரும் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு கட்சிகளும், தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனிடையே, வெள்ளிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில், பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தேர்தல் அறிக்கையை வெளியிட, டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி, தேர்தல் அறிக்கைப் பெற்றார்.

இந்த தேர்தல் அறிக்கையால், டெல்லி மக்களின் ஆதரவு கிடைக்கும் என, பாஜகவினர் நம்புகின்றனர். அந்த அளவிற்கு மிகக் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையினை அக்கட்சியானது வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், டெல்லியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் நலிவடைந்த குடும்பத்தினைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு, ஈ-ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிப்பு. சுத்தமான குடிநீரினை அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிக்கை.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ், டெல்லியில் இருப்பவர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். சிறு, குறுத் தொழில்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். டெல்லியில் பத்து புதியக் கல்லூரிகள் மற்றும் 200 புதிய பள்ளிகள் திறக்கப்படும். ஏழைக் குடும்பத்தில், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால், அக்குழந்தைகளின் வங்கிக் கணக்கில் பிக்சிட் டெபாசிட் முறையில் பணம் செலுத்தும். அதனை, அவர்கள் தங்களுடைய 21வது வயதில் பெறலாம்.

அடுத்த ஐந்தாண்டுகளில், டெல்லியில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். குறிப்பிட்ட சில விதவைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையானது, 2,500ல் இருந்து 3,500 ஆக உயர்த்தப்படும். சுற்றுச்சூழல் மாசினைக் குறைக்க, எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

HOT NEWS