கோலி உங்கள் மனைவியினை விவாகரத்து செய்ய வேண்டும்! பாஜக எம்எல்ஏ பேச்சு!

28 May 2020 சினிமா
paatallok.jpg

விராட்கோலி, தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவினை விவாகரத்து செய்ய வேண்டும் என, பாஜக எம்எல்ஏ குர்ஜார் பேசியுள்ளார்.

நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தற்பொழுது, பாதாள் லோக் (பாதாள உலகம்) என்ற பெயரில், புதிய வெப் சீரிஸினைத் தயாரித்து உள்ளார். அந்தத் தொடரில், வட இந்தியாவில் நடைபெறும் அரசியல் குற்றங்கள் மற்றும், மறைமுக அரசியல்கள் குறித்து பேசப்பட்டு உள்ளன.

இது பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதனிடையே, இதன் மீது பலவிதமான விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன. அதில் பல அரசியல் சூழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, பல அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், இந்த சீரிஸ் அரசியல்வாதிகள் மத்தியில் பூகம்பத்தினை உருவாக்கி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள எம்எல்ஏ நந்தகிஷோர் குர்ஜார். பாஜகவினைச் சேர்ந்த இவர் பேசுகையில், தன்னுடையப் புகைப்படத்தினை, தன்னுடைய அனுமதி இல்லாமல் அனுஷ்கா பயன்படுத்தி உள்ளார் என புகார் அளித்துள்ளதாக கூறினார். மேலும், விராட்கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவினை விவாகரத்து செய்ய வேண்டும் எனவும், விராட் கோலி தேச பக்தர் எனவும் கூறியுள்ளார்.

இது தற்பொழுது நகைப்புடன் கூடிய செய்தியாக, வைரலாகி வருகின்றது.

HOT NEWS