ஜிங்பிங்கா கிம் ஜோங்கா கன்ப்யூஸ் ஆன பாஜகவினர்! வைரலாகும் வீடியோ!

20 June 2020 அரசியல்
bjpcomedy.jpg

சீனாவின் தாக்குதலால், கல்வான் பள்ளத்தாக்குதல் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் பலியாகி உள்ளனர். இது இந்திய மக்களிடம் கடும் எதிர்ப்பினை உருவாக்கி உள்ளது.

இதனால், சீனப் பொருட்களை எதிர்ப்போம். சீனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவோம் எனக் கோஷமிட்டு வருகின்றனர். ஒரு சிலர், சீனத் தலைவர்களின் புகைப்படங்களை எரித்தும் வருகின்றனர். இதில் தற்பொழுது காமெடி ஒன்றும் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன்சோல் பகுதியில், பாஜக தொண்டர்கள் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவ பொம்மையை எரித்தனர். இது தான் தற்பொழுது கிண்டலாக மாறியுள்ளது.

அவர்கள் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் உருவபொம்மையை எரிக்கின்றோம் என்றுக் கூறி, வடகொரிய அதிபர் கிம் ஜோங்க்கின் உருவ பொம்மையை எரித்து உள்ளனர். இது தற்பொழுது கேலிக்கு உல்லாகி உள்ளது.

HOT NEWS