டெல்லிக் கலவரம்! பாஜவினர் கைது!

16 March 2020 அரசியல்
delhiviolence12109.jpg

டெல்லியில் நடைபெற்றக் கலவரம் தொடர்பாக, பாஜக கட்சியினைச் சேர்ந்த ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லியில் கடந்த மாதம் 23ம் தேதி முதல் பயங்கரமான கலவரம் நடைபெற்றது. இதில், 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2,000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 700க்கும் மேற்ப்பட்ட எப்ஃஐஆர் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், இதுவரை எந்த பாஜகவினரும் கைது செய்யப்படவில்லை என, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனிடையே, 25 வயதுடைய முகமது தாரிக் மற்றும் 26 வயதுடைய முகமது இப்ராஹிம் ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இதில் படுகாயமடைந்த முகமது தாரிக் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கலவரம் தொடர்பான வீடியோக்களை, போலீசார் தீவிரமாக அலசி ஆராய்ந்தனர். அதில், தாரிக் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக, பாஜக கட்சியினைச் சேர்ந்த இளைஞர் பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் 35 வயதுடைய வினய் வார்ஷனே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரை, அடையாளம் கண்ட போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். அவர், தன்னுடையக் கையில் இருந்த துப்பாக்கியினால், தாரிக்கினைச் சுட்டது உட்பட பல வன்முறைக் காட்சிகள், வீடியோவில் பதிவாகி உள்ளன. இதனால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

HOT NEWS