மணிப்பூரில் பாஜக அரசானது ஆட்சியில் உள்ளது. அங்கு நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், பாஜக அரசு வெற்றி பெற்றதன் மூலம், ஆட்சியானது தக்கவைக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் கட்சியின் உதவியுடன், பாஜக ஆட்சியில் உள்ளது. திடீரென்று, எங்கள் ஆதரவினை திரும்பப் பெருகின்றோம் என்று தேசிய மக்கள் கட்சிக் கூறியதால், மணிப்பூரில் பாஜகவின் ஆட்சியின் ஸ்திரத்தன்மையில் சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் ஆட்சியினைக் கவிழ்க்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட ஆரம்பித்தது.
அந்தக் கட்சியானது, பாஜகவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் வேண்டுகோளினை ஏற்று, தேசிய மக்கள் கட்சியானது மீண்டும் பாஜகவிற்கு ஆதரவளிப்பதாகக் கூறியது. இதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பாஜக வெற்றி பெற்றது.
இந்த வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றக் காரணத்தால், பாஜகவின் ஆட்சி மணிப்பூரில் நீடிக்கின்றது. அதனை தற்பொழுது, பாஜக தொண்டர்கள், பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.