பிளாக் பேந்தர் நாயகன் கேன்சரால் மரணம்! உலகம் முழுக்க ரசிகர்கள் கண்ணீர்!

29 August 2020 சினிமா
blackpantherdied.jpg

பிளாக் பேந்தர் படத்தில் நாயகனாக நடித்த, சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் உயிரிழந்தார்.

மார்வெல் தயாரிப்பில், வசூலில் கல்லா கட்டியத் திரைப்படம் என்றால், அது பிளாக் பேந்தர் தான். அவெஞ்சர்ஸ் திரைப்படம் அனைவருக்கும் ஏற்கனவே, நன்கு அறிமுகமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. அதனால், அந்தப் படத்தின் வசூலில் குறைவே இல்லை. ஆனால், முதல் பாகத்திலேயே உலகளவில் மாபெரும் வசூலினைக் குவித்தத் திரைப்படம் என்றால், அது பிளாக்பாந்தர் திரைப்படம் தான்.

அந்தப் படத்தில் நடித்த சாட் போஸ்மேன் என்ற நடிகருக்கும், உலகம் முழுக்க ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் இருந்தனர். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் பிறந்த போஸ்மேன், 2013ம் ஆண்டு முதல் நடித்து வருகின்றார். அவருடையப் பலப் படங்கள், வசூலில் சக்கைப் போடு போட்டுள்ளன. அவருக்கு பெருங்குடலில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக, அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து இருந்துள்ளார்.

இது யாருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. 43 வயதான அவர், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவருடைய குடும்பத்தார், இது அனைவருக்கும் பேரிழப்பு என்றுக் கூறியுள்ளனர். இதனால், மார்வெல் ரசிகர்கள் மட்டுமின்றி, போஸ்மேன் ரசிகர்களும் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS