விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளையும், பல்லாயிரம் கண்டுபிடிப்புகளையும் செய்துள்ள நிறுவனம் நாசா. இந்த நிறுவனம், பல உண்மைகளை மக்களிடமிருந்து மறைத்து வருகிறது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான், இந்த பிளாக் நைட்(BLACK KNIGHT). இந்த விண்கலம் பல்லாயிரம் ஆண்டுகளாக, பூமிக்கு வெளியில் தன்னுடைய சுற்றுவட்டப் பாதையில் நின்று கொண்டிருக்கிறது. இதனை முதலில் ஆராய்ச்சி செய்த நாசா, பின்னர் இதனைப் பற்றியச் செய்திகளை வெளியிட மறுத்துவிட்டது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இன்றும் இதிலிருந்து சிக்னல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இதனை முதலில், டெஸ்லா, மற்றும் மார்டூகாணீ கண்டுபிடித்தனர். இதிலிருந்து வரும் சிக்னல்களை ஹேக் செய்ய இயலாத காரணத்தால் இவர்களால் இதனைப் பற்றி மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யவில்லை. நாசா விஞ்ஞானிகளும், இதனை நோக்கி தன்னுடைய சிக்னல்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து வருகிறது. ஆனால், இவை அனைத்துமே, "reflect"ஆகி நாசாவிடமே திரும்பிவிடுவதால், விஞ்ஞானிகளால் ஆராய்ச்சி செய்ய இயலவில்லை.
இந்த BLACK KNIGHT விண்கலம், நாம் பூமியிலிருந்து அனுப்பப்படும் செயற்கைகோள்களை விட, அதிவேகமாக செயல்படக்கூடியது. இத்தகைய மர்மம் நிறைந்த விண்கலைத்தை ஆராய்ச்சி செய்ய ரஷ்யாவும், தன்னுடைய விண்கலத்தை அனுப்பி வைத்தது. ஆனால், அதுவும் எவ்விதத் தகவல்களும் இன்றி தோல்வியிலேயே முடிந்தது. இதனை வெறும் சாதாரணக் கல் என்று கூறி வரும் நாசா, மறைமுகமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து வருகிறது. ஆனால், ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இது விண்கலம் என்றும், இது கிட்டத்தட்ட 13,000 ஆண்டுகள் பழமையானது என்றும், நம்புகின்றனர்.
இதில் உள்ள ஆச்சர்யமே, இது தன்னுடையத் திசையையோ, சுற்றுப்பாதையையோ மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்து வருகிறது. மனித இனம் விண்வெளிக்கு விண்கலங்களையும், செயற்கைக்கோள்களையும் அனுப்ப ஆரம்பித்து சில நூற்றாண்டுகளே ஆகின்றன. ஆனால், இந்த பிளாக் நைட் விண்கலம் 13000 ஆண்டுகளுக்கு மேலாக விண்ணில் ஒரே இடத்தில் இருப்பது யாருக்கும் புரியாத ஒன்றாகும்.