கள்ளச் சந்தை ஒரு சிறப்பு பாப்வை

10 March 2019 தொழில்நுட்பம்
boeing737.jpg

முதலில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், கள்ளச் சந்தை என்பது என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது. அதனால் என்ன பலன் மற்றும்? அதனால் என்ன லாபம் என்பதைப் பார்க்கலாம். வெளிநாட்டில் ஒரு பொருளை மறைமுகமாக அரசிற்கு வரி செலுத்தாமல் எடுத்து வந்து வியாபாரம் செய்வது, இந்தியாவில் விற்கப்படும் பொருட்களுக்கு அரசிடம் வரி செலுத்தாமல் மறைமுகமாக மக்களிடம் விற்பனை செய்வது "கள்ளச் சந்தை" எனப் பொருள்படும்.

கள்ளச்சந்தை என்பது தாதாக்களாலும், அரசியல்வாதிகளின் உதவி உள்ளவர்களாலும் மறைமுகமாக நடைபெறுகிறது. கள்ளச்சந்தையில் அனைத்தும் கிடைக்கின்றன. தற்காலங்களில் கள்ளச்சந்தையானது இனையத்தைப் பயன்படுத்தி செயல்படுகிறது. இவை "DEEP WEB"-ல் எனும் மாய வலையில் கள்ளச்சந்தை விற்பனை, செழிப்பாக நடைபெறுகிறது.

இதனால் நாட்டிற்கு நஷ்டத்தைத் தவிர்த்து, இலாபம் என்பது இல்லை. ஆனால், இதன் மூலம் கிடைக்கும் பொருட்கள் நாம் எதிர்பர்த்ததை விட, மிக மலிவாக கிடைப்பதால் மக்கள் சட்டத்திற்கு பயந்தாலும், சலுகை மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதனை வெகுவாகப் பயன்படுத்துகின்றனர்.

என்ன பிரச்சனை:-

முதலில் கள்ளச் சந்தையில் கிடைக்கும் பொருட்கள் எந்த அளவிற்குத் தரமானவை என்பதை, நாம் அனைவரும் அறிவோம். நாட்டிற்கு வரி செலுத்தாமல், கள்ளச் சந்தைளில் வியாபாரம் நடைபெறுவதால், நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் பொருளாதரப் பிரச்சினையையும், நஷ்டத்தையும் விளைவிக்கிறது. கள்ளச் சந்தையில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் விற்கப்படுவதால் இளைஞர்களும், மக்களும் தீய வழியில் செல்ல து]ண்டு கோலாக அமைகிறது. பாலியல் தொழிலானது, கள்ளச் சந்தையின் மிக முக்கியமான வியாபரமாக உள்ளது. இது எவ்வளவு பெரியச் சமூக சீர்கேடு என்பதை நாடே அறியும். அரசாங்கம் எவ்வளவு முயற்சி செய்து கள்ளச் சந்தையை ஒழிக்க திட்டம் இட்டாலும், மக்கள் மீது அரசு திணிக்கும் வரியைக் குறைக்காமல் கள்ளச் சந்தையை ஒன்றும் செய்ய இயலாது, என்பதே உண்மை.

HOT NEWS