இரவில் இந்தியாப் போர் விமானங்கள் வரும்! பயத்தில் இருண்ட கராச்சி!

10 June 2020 அரசியல்
military-jet.jpg

பாகிஸ்தானில் கடந்த 2019ம் ஆண்டு பால்கோட் பகுதியில், இந்திய இராணுவமும் விமானப்படையும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. அதிலிருந்து, பாகிஸ்தானியர்கள் கடும் பயத்தில் உள்ளனர்.

இதனிடையே, நேற்று பாகிஸ்தானில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் பறந்ததாக, பாகிஸ்தானியர்கள் கருதியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் தங்களுடைய சமூக வலைதளக் கணக்குகள் மூலம், தங்கள் பதிவினை வெளியிட ஆரம்பித்தனர். குறிப்பாக, கராச்சி நகரின் மேல், இந்தியப் போர் விமானங்கள் பறந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட்டன.

இதனால், கராச்சி நகரம் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இதற்கிடையில், உண்மையில் இந்திய விமானங்கள் எதுவும் பறக்கவில்லை எனவும், பறந்தது பாகிஸ்தான் இராணுவ விமானங்கள் எனவும் கூறப்பட்டு வருகின்றது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜெஎப்-17 மற்றும் மிராஜ் ரக விமானங்களை, பாகிஸ்தான் விமானப்படை கராச்சியில் நிலை நிறுத்தியது.

இதனை தற்பொழுது பலரும் கேலி செய்து வருகின்றனர். உங்கள் விமானப்படையின் விமானத்தினைப் பார்த்தே, நாங்கள் என்று பயப்படுகின்றீர்கள் என, இந்தியர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

HOT NEWS