இயக்குநர் ஆனாரா ப்ளூ சட்டை மாறன்?

14 September 2019 சினிமா
bluesattaimaran.jpg

ப்ளூ சட்டை மாறனை, தமிழகத்தில் உள்ள இணையப் பயன்பாட்டாரள்களுக்குத் தெரியாமல் இருக்காது. அந்த அளவிற்கு அவர் பிரபலமானவர். அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அடுத்தவருடையப் படங்களை, இவர் விமர்சனம் செய்து பிரபலமடைந்தவர்.

இவர் திரைப்படங்களை விமர்சனம் செய்கின்றேன் என்ற பெயரில், பெரும்பாலானப் படங்களை கழுவிதான் ஊற்றியுள்ளார். இவர் விஜய், அஜித் என யாரையும் விட்டு வைத்தில்லை. இடையில் விமர்சனம் செய்த படங்களின் வீடியோக்களைத் திடீரென்று தூக்கிவிடுவார். பலரும், அவர் சினிமாத் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து, பணம் வாங்கியிருக்கிறார் எனக் கூறியிருக்கின்றனர்.

பெரிய நடிகர்களின் ரசிகர்கள் இவரை, திட்டாத நாள் இல்லை. அப்படி இருக்கையில், தற்பொழுது தலைவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான திரு. காமாட்சியின் தயாரிப்பில், ப்ளூசட்டை மாறன் படம் இயக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் விதத்தில், புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. இதனை முன்னிட்டு, பலரும் இந்த சம்பவத்தை அதிர்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும் கிண்டல் செய்ய, ஆரம்பித்துவிட்டனர்.

HOT NEWS