2 மணி நேரம் 4 நிமிடம் ஓடக் கூடிய ஒரு குறும்படம் பார்க்க நீங்கள் தயாரா? அப்படின்னா, நீங்க கண்டிப்பா, இந்தப் படத்திற்குச் செல்லலாம். அந்த அளவிற்கு சிறியக் கதையை, மிக நீளமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
ஒன்றுமில்லை, நாளை திருமணம், இன்று தன் நண்பர்களைப் பார்த்துவிட்டு வரலாம் என நாயகன் வருகிறார். அங்கு, எதிர்பாராத விதமாக, போதைப் பொருளைப் பயன்படுத்தி விடுகிறார். பின்னர் என்ன நடந்தது என்பது தான், படத்தின் மீதிக் கதை.
என்ன, கேட்கும் பொழுதே, எரிச்சல் ஆகிறீர்களா? படத்தின் பாடல்கள் கேட்கும் அளவில் கூட இல்லாமல் இருப்பது, படத்தின் மிகப்பெரிய பலவீனம் ஆகும். படத்தின் காட்சிகள் சற்று போரடிக்கும் விதத்திலேயே இருக்கின்றது. புது முகங்களாக இருந்தாலும், கதாநாயகன் நடிப்பு நன்றாக உள்ளது. மற்றவர்கள் சொதப்பல். பெரிய அளவில் இந்தப் படத்தில் இது நன்றாக உள்ளது. அது நன்றாக உள்ளது என்றுக் கூறும் அளவிற்கு, இந்தப் படத்தில் எதுவும் இல்லை. ஒருவேளை இருந்தால், நீங்கள் சொல்லுங்கள்.