ஒவ்வொருவருக்கும் நஷ்ட ஈடு தரும் போயிங் நிறுவனம்!

24 September 2019 அரசியல்
boeing.jpg

உலகப் புகழ் பெற்ற விமானத் தயாரிப்பு நிறுவனம் என்றால், அது போயிங். மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்நிறுவனம் சமீப காலமாக, மாபெரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற, விமான விபத்துக்களில் போயிங் ரக விமானங்களே, அதிகம் சிக்கியுள்ளன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

நூற்றுக்கும் மேற்பட்டோர், போயிங் 737 மேக்ஸ் விமான விபத்துக்களின் காரணமாக, அமெரிக்காவில் வழக்கினைத் தொடர்ந்தனர். இதனால், அந்நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நஷ்ட ஈடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், தற்பொழுது தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, விபத்தில் இறந்த 346 பேருக்கும், தலா 1,44,500 அமெரிக்க டாலர்கள் தர வேண்டும் என தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதற்காக, போயிங் நிறுவனம் தற்பொழுது 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளதாக தகவல் அளித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் கூறுகையில், ஒவ்வொருவரின் மீதும் தனிப்பட்ட அக்கறை வைத்திருப்பதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தாராளமாக உதவுதாகவும் கூறியுள்ளது.

HOT NEWS