போயிங் 737 விமானம், நதியில் இறக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பயணம் செய்த யாருக்கும் எவ்விதப் பிரச்சனையும் இல்லை, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கியூபாவில் உள்ள குண்டனாமோ விரிகுடா பகுதியில் இருந்து, ப்ளோரிடாவிற்குப் பறந்த போயிங் 737 விமானம், தரையிறங்கும் போது, ஏற்பட்டக் கோளாறின் காரணமாக, நதியில் இறக்கப்பட்டதாக, முதல்கட்ட விசாரணையில், தெரிய வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்து நடக்க உள்ளதை அறிந்த, அதிகாரிகள் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு தகவல் கொடுத்ததாகவும், அதற்கு ட்ரம்ப் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும், மருத்துவ உதவிகளை, தயார் செய்யவும் உத்தரவிட்டதாகவும், அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானியின் சாதூர்யத்தால், அந்த விமானம், எவ்விதப் பாதிப்பும் இன்றி, நதியில் இறங்கியது. விமானத்தில் இருந்த யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.