கொரோனா வைரஸால் 34 வயது டிவி நடிகை பலி! சோகத்தில் பாலிவுட்!

08 December 2020 சினிமா
divyabhatnagar.jpg

கொரோனா வைரஸ் காரணமாக, பாலிவுட் டிவி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர் பலியானார். அவருக்கு வயது 34.

பாலிவுட்டில் யா ரிஷ்தா கேக்லதா ஹய் என்றத் தொடரில் நடித்துப் பிரபலமானவர் திவ்யா. இவருக்கென தனி ரசிகர்கள் படையே உண்டு. தேரா யார் ஹூன் மெயின் என்ற நகைச்சுவைத் தொடரிலும் அவர் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த சூழலில், அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் அவசர அவசரமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செய்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்குப் பலரும் தங்களுடைய இறங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS