விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

30 October 2019 சினிமா
bigilreview.jpg

நடிகர் விஜயின் வீட்டிற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

நடிகர் விஜயின் திரைப்படமான பிகில், தற்பொழுது திரையறங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இந்நிலையில், நேற்று சென்னை காவல்துறைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர அழைப்பு வந்தது. அதில், நடிகர் விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறப்பட்டது. நீங்கள் யார் எனக் கேட்கும் முன்னரே, போன் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து, விஜயின் இரண்டு வீடுகள் மற்றும் தாய் ஷோபனா பெயரில் உள்ள திருமண மண்டபம் உள்ளிட்டவைகளில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சல்லடைப் போட்டு அலசியப் பின்னரும் எதுவும் கிடைக்காததால், அது வெறும் புரளி என்பது உறுதியானது.

இதனையடுத்து, கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போனின் நம்பரை வைத்து, போன் செய்த நபரைப் போலீசார் கைது செய்து விசாரிக்கையில், அவர் மது போதையில் இருப்பது தெரிந்துள்ளது. இது தற்பொழுது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

HOT NEWS