திமுக தலைமையகமான, அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ள நபரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில், திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் உள்ளது. அங்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக, மர்ம நபர் ஒருவர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த போலீசார், மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் என அனைவரையும் அழைத்து, தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த விஷயத்தினைக் கேள்விப்பட்ட தொண்டர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால், அப்படி எதுவும் இல்லாததை உறுதி செய்த போலீசார், மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்துக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், தற்பொழுது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.