கீழடியில் மனித மண்டை ஓடு, மர்ம விலங்கின் எலும்பு! மாறும் வரலாறு!

08 June 2020 அரசியல்
keeladibone.jpg

கீழடியில் தற்பொழுது ஆறாவது கட்ட அகழ்வாய்வுப் பணியானது, நடைபெற்று வருகின்றது.

உலகின் வரலாற்றையே மாற்றி அமைக்கும் விதத்தில், மதுரை கீழடிப் பகுதியில் நடைபெற்று வருகின்ற அகழ்வாய்வு பணியானது உள்ளது. அந்த அளவிற்கு, இதிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு கிடைக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, சிந்து சமவெளி நாகரீகத்தினை விட, தமிழ் மக்களின் நாகரீகமே முந்தையதாகவும், பழமை நிறைந்ததாகவும் உள்ளது.

இங்கு கிடைத்த ஆதாரங்களை அடுத்து, தமிழகத்தின் பலப் பகுதிகளில் அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று தூத்துக்குடிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற ஆய்வில், பலங்காலத்து முதுமக்களின் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பரம்பு என்ற இடத்தில் நடைபெற்ற ஆய்வில், இரண்டு முதுமக்கள் தாழிகள் மற்றும் இரண்டு மனிதர்களின் கைகளின் மூட்டு எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

அதே போல், கீழடியில் ஏற்கனவே 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதரின் மண்டை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதனை, தற்பொழுது பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர். அதனை தற்பொழுது ஆய்விற்கு அனுப்பி உள்ளது மத்திய தொல்லியல் துறை. இந்த சூழ்நிலையில், அங்கு விநோதமான விலங்கின் எலும்புக் கூடும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இந்த எலும்பானது, 3000 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும், இது எந்த விலங்கின் எலும்பு என்றேத் தெரியாத அளவிற்கு இது பெரிய அளவில் இருந்துள்ளது. இதனைப் பார்த்த பலரும், யாழி என்று நம்புகின்றனர். யாழி என்பது பற்றி, தமிழில் உள்ள சங்ககாலப் பாடல்களில் இடம் பெற்று உள்ளது. இருப்பினும், இது குறித்த எவ்வித தரவோ அல்லது பதிவோ தற்பொழுது வரைக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS