தீவிர சிகிச்சையில் போரிஸ் ஜான்சன்! மருத்துவமனையில் அனுமதி!

07 April 2020 அரசியல்
borisjohnsonicu.jpg

நேற்று, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த மார்ச் 27ம் தேதி அன்று, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், பொதுமக்களும் அவ்வாறு சோசியல் டிஸ்டன்சைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இங்கிலாந்தில் இருந்து உறுதி செய்யப்பட்ட செய்தி ஒன்று வெளியானது. அதில், இங்கிலாந்து பிரதமரின் உடல்நிலைக் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்பொழுது அவர் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இன்று வெளியான செய்தியில், அவருடைய உடல்நிலையின் காரணமாக, அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் உடலுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் கூறப்பட்டு உள்ளது. இருப்பினும், அவருக்கு மருத்துவர்கள் சிறந்த சிகிச்சையினை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி, அவருக்கு வென்டிலேட்டர் பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் பற்றியத் தகவல்கள், உடனுக்குடன் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தெரிவிக்கப்படுவதாக் கூறப்பட்டு உள்ளது. மேலும், டோமினிக் ராப் (வெளியுறவுத் துறை செயலாளர்) என்பவரை அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள போரிஸ் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS