தப்பித்த போரிஸ்! நார்மல் வார்டிற்கு மாற்றம்!

11 April 2020 அரசியல்
borisjohnsonicu.jpg

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், தற்பொழுது நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

மார்ச் 29ம் தேதி அன்று, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், தன்னுடைய வீடியோ பதிவில் தெரிவித்தார். இதனால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், வீட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வந்த அவருடைய உடல்நிலையானது, மோசமாக ஆரம்பித்ததால், அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கபட்டார். இருப்பினும், அவருக்கு வென்டிலேட்டர் உதவி வழங்கப்படவில்லை.

செயற்கை சுவாசத்தின் உதவியுடன், அவர் நன்றாக சுவாசித்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் உடல்நலத்தினை, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும், பக்கிங்காம் அரண்மனையும் விசாரித்தனர். பின்னர், அவருடைய உடல்நலம் பற்றியத் தகவல்கள் உடனுக்குடன் தரவும் உத்தரவிட்டனர். இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், போரிஸ் நன்றாக இருப்பதாகவும் பயப்படும்படி எதுவும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

அவர் தற்பொழுது நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் எனவும் கூறியுள்ளனர். அவர் சீக்கிரம் உடல்நலம் தேறி வர வேண்டும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், இந்தியப் பிரதமர் மோடியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS