இங்கிலாந்து பிரதமர் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதி!

06 April 2020 அரசியல்
borisjohnson.jpg

இங்கிலாந்து பிரதமர் போரிஷ் ஜான்சன், தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்து நாட்டில், தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. அந்நாட்டில் வேகமாகப் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால், இந்த செயலினை அந்நாட்டு அரசாங்கம் செய்துள்ளது. அந்நாட்டு பிரதமர் போரிஷ் ஜான்சனுக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இது குறித்து வீடியோ மூலம் மக்களுடன் உரையாற்றிய போரிஷ் ஜான்சன், தனக்கு கொரோனாவைரஸ் தொற்று இருப்பதாகவும், இதனால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், பத்து நாட்களைத் தாண்டியும் அவருடைய உடல்நிலை மோசமாகவே இருப்பதால், தற்பொழுது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மருத்துவர்களின் ஆலோசனைப் படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அவர் குணமாவார் எனவும் கூறப்படுகின்றது. இது குறித்துப் பேசியுள்ள மருத்துவர்கள், பயப்படும்படி எதுவும் இல்லை எனவும், அவசர நிலை ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS