இந்திய அளவில் தற்பொழுது, பேசும் பொருளாகவும், வைரலாகவும் இருப்பது #BoycottAmazon என்ற ஹேஸ்டேக்.
அமேசானை ஏற்கனவே, மத்திய அரசு ஒரு முறை எச்சரித்து இருந்தது. நியாபகம் இருக்கிறதா? இந்தியத் தேசியக் கொடியை கால் மிதிகளில், செருப்புகளில், டாய்லெட் கவர்களில் பயன்படுத்தி இருந்தப் பொருட்களை விற்றதால், இத்தகையப் பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு அமேசான் தரப்பில், வருத்தம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், அத்தகையப் பொருட்களை உடனே அமேசான் தளத்தில் இருந்து, உடனடியாக நீக்கினர்.
இந்நிலையில், தற்பொழுது புதியப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆம், அதே செருப்பு, டாய்லெட் விரிப்புகள், கால் மிதிகள் மற்றும் டாய்லெட் கவர்கள் என அனைத்திலும், இந்திய தேசியக் கொடி, இந்துக் கடவுள்களான, சிவபெருமான், கணபதி, இராமர், கிருஷ்ணர் என அனைவரின் படங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு, தெரிவித்து #BoycottAmazon என்ற ஹேஸ்டேக்கைப் பயன்படுத்தி உள்ளனர்.