இந்தியாவில் தீபாவளி நாட்களில், சீன பொருட்களை புறக்கணித்ததன் விளைவாக, அந்நாட்டிற்கு 42,000 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. லடாக் மற்றும் லே எல்லைப் பகுதிகளிலும், இரு நாடுகளும் தொடர்ந்து தங்களுடையப் படையினைக் குவித்த வண்ணம் உள்ளனர். இதனால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இந்திய அரசு கடுமையான வரியினை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் இறக்குமதியானது, வெகுவாகக் குறைந்தது.
இது சீனாவிற்கு கடுமையான நஷ்டத்தினை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பானது புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா உள்ளிட்டவைகளில் ஆய்வு ஒன்றினை செய்தது. அதன்படி இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையில், இந்தியா முழுவதும், இந்த தீபாவளி சமயத்தில் மட்டும் சுமார் 70,000 கோடிக்கு விற்பனை நடைபெற்று உள்ளது. இதில், 42,000 கோடி ரூபாய்க்கு சீனாவிற்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. சீனாவின் பொருட்களைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் இந்தியர்கள், சீனப் பொருட்களை தீபாவளி சமயத்தில் வாங்க முன்வரவில்லை. இதனால், அந்நாட்டிற்கு இவ்வளவு பெரிய அளவிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.