நீங்கள் சந்திராயனை2 பார்த்தீர்களா! சர்வதேச விண்வெளி ஓடத்தில் உள்ளவர்களிடம் பிராட் பிட் கேள்வி?

17 September 2019 சினிமா
bradpitt.jpg

நீங்கள் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து, சந்திராயன்2 விண்கலத்தைப் பார்த்தீர்களா என, ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் கேள்வி கேட்டுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டைப் பற்றி, அனைவருக்கும் தெரியும். அவருடைய ஆட் அஸ்த்ரா திரைப்படம் திரைக்கு வர உள்ளது. நிலவினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் புரோமோஷன் பணிக்காக, அவர் நாசா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்குச் சென்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நாசா நடத்திய நிகழ்ச்சியில், பங்குபெற்ற பிராட் பிட், நாசாவின் மையத்தில் இருந்து கொண்டு, சர்வதேச விண்வெளி மையத்திடம் பேசினார். அப்பொழுது அவர் அங்கிருந்த விண்வெளி வீரர் நிக் என்பவருடன் உரையாடினார்.

சுமார் 20 நிமிடம் நடைபெற்ற உரையாடலில், அவர் அந்த வீரரிடம் இந்தியா சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, அங்கு நிலவில் நிலைநிறுத்த உள்ளது. அதற்கு, நம் நாசாவும் தன்னுடைய ஆதரவினைத் தெரிவித்துள்ளது. அந்த நிகழ்வினை நீங்கள் பார்த்தீர்களா? எனக் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறிய நிக், எங்களால் பார்க்க முடியவில்லை. இங்கிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே எங்களால் பார்க்க முடியும் என்று பதில் கூறினார். சந்திராயன் 2 திட்டத்தை, உலகமே கவனித்துள்ளது என்பதற்கு, ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் ஒரு உதாரணம்.

HOT NEWS