பிரம்மோற்சவம் ஆரம்பமாக உள்ளது! முன்னேற்பாடுகள் தீவிரம்!

24 September 2019 அரசியல்
thirupathi.jpg

திருமலை திருப்பதியில், வருடா வருடம் பிரம்மோற்சவம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, பிரம்மோற்சவ திருவிழா வரும், செப்டம்பர் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சுமார் 9 நாட்கள் நடைபெற உள்ளது.

இதனை திருப்பதி தேவஸ்தானம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதி மாலை, 5.23 மணியளவில், கொடியேற்றம் தொடங்குகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி காலையில் சிறிய ஷேஷ வாகன வீதி உலாவும் மாலையில், ஹம்ச வாகன வீதி உலாவும் நடைபெறுகின்றது.

அக்டோபர் 2ம் தேதி காலையில் சிம்ம வாகன வீதி உலாவும் அதே போல் மாலையில், முத்துப்பந்தல் உலாவும், 3ம் தேதி காலை உலகப் புகழ்பெற்ற கல்ப விருட்ச உலாவும், மாலையில் சர்வ பூபால வீதி உலாவும் நடைபெற உள்ளன.

4ம் தேதி பல்லாக்கு உலாவும், மாலையில் கருட வாகன உலாவும் நடைபெற உள்ளது. மேலும், 5ம் தேதி காலையில் அனுமந்த வாகன உலாவும், மாலையில் பிரசித்திப் பெற்ற தங்கத் தேரோட்டமும் நடைபெற உள்ளது. 6ம் தேதி காலையில் சூரிய பிரபையில் உலா வரும் மலையப்பர், மாலையில் சந்திர பிரபையிலும் பக்தர்கள் மத்தியில் உலா வருகின்றார். பின்னர், 7ம் தேதி காலையில் தேரோட்டமும், இரவில் குதிரையிலும் வீதி உலா வர உள்ளார் திருப்பதி மலையப்பர். கடைசியாக அக்டோபர் 8ம் தேதி சக்கர மூர்த்திக்கு ஸ்நானம் செய்யப்பட்டு, திருப்பதி திருவிழாக் கொடி பூஜைகளுடன் இறக்கப்படுகிறது.

பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு, விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

HOT NEWS