பிரேசிலில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா! திடீர் அதிகரிப்பால் உலகமே அதிர்ச்சி!

21 May 2020 அரசியல்
brazilflag.jpg

பிரேசிலில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவுவதன் வேகம், அதிகரித்துக் கொண்டே உள்ளது.

உலகம் முழுவதும் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது, மூன்று லட்சம் பொதுமக்களின் உயிர்களை பரிதாபமாக பறித்துள்ளது. இந்த வைரஸால், ஐம்பது லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோயில் இருந்து 19 லட்சம் பேர் மீண்டு உள்ளனர்.

இந்த நோயால், தற்பொழுது உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 80,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸின் பாதிப்பானது, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்பொழுது தீவிரம் அடைந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சப்தமே இல்லாமல் பிரேசிலில் இந்த வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகின்றது. அங்குள்ள அமேசான் காடுகளில் வசித்து வருகின்ற ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கும் இந்த வைரஸானது பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த வைரஸானது, நேற்று மட்டும் 19,951 பேரிடம் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் மொத்தமாக, 2,93,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 1,17,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல், நேற்று ஒரே நாளில் மட்டும் 900 பேர் மரணமடைந்து உள்ளனர்.

அந்த நாட்டில், இந்த வைரஸால் 19,000 பேர் மரணமடைந்து உள்ளனர். இந்த வேகத்தில் வைரஸ் பரவினால், கண்டிப்பாக பிரேசிலில் பெரும் அழிவே ஏற்படும் என, பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதற்கு அந்நாட்டு அதிபர் பொல்சொரோனாவின் அலட்சியமேக் காரணம் எனக் கூறியும் வருகின்றனர்.

HOT NEWS