பிரேசில் அதிபருக்கு கொரோனா! தலைவர்கள் அதிர்ச்சி!

08 July 2020 அரசியல்
bolsonarocovid19.jpg

பிரேசில் நாட்டு அதிபர் பொல்சனாரோவுக்கு தற்பொழுது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. தற்பொழுது ஒரு கோடி இருபது லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4,75,000 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக பல நாட்டு தலைவர்களும் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். இந்த சூழ்நிலையில், பிரேசில் நாட்டு அதிபர் பொல்சனாரோவுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

பிரேசில் நாட்டில் தற்பொழுது கொரோனா வைரஸ் பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பிரேசிலில் தற்பொழுது 15 லட்சம் பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 65,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அங்கு அதிபருக்கும் கொரோனா தொற்று இருப்பதால், பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

HOT NEWS