பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து, 54,000 பேர் நீக்கப்பட உள்ளதாக வெளியான செய்தி, உறுதியானது. இந்நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 54,000 பேர் நீக்கப்பட உள்ளனர்.
பட்ஜெட் பற்றாக்குறை, போதிய வியாபாரம் இன்மை மற்றும் நஷ்டம் இவற்றின் காரணமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சேர்ந்த 58,000 பேர் தற்பொழுது நீக்கப்பட உள்ளனர். இன்று 1.75 லட்சம் பணியாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில், வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுடைய வேலை செய்யும் வயதை, 60ல் இருந்து 58 ஆக மாற்ற முடிவு செய்துள்ளது. மேலும், 50 வயதிற்கு மேல் வீஆர்எஸ் வாங்கிக் கொள்ளும் வகையில் சில மாற்றங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் செய்ய உள்ளது. இவ்வாறு, செய்யும் பொழுது அடுத்த 5 வருடங்களில் 15,000 கோடி ரூபாயை சேமிக்க முடியும் என கணித்துள்ளது.
இதன் மூலம், பிஎஸ்என்எல் செலவுகளை சமாளிக்க முடியும் எனவும், தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை நடத்த முடியும் எனவும் நம்புகிறது. தன்னுடைய வேலையாட்களில், 31% பேரை வேலையை விட்டு நீக்க உள்ளது, அந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நடவடிக்கையை, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக அமல்படுத்த உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.