தற்பொழுது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால், 599 ரூபாய்க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தினை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தற்பொழுது ஐடித் துறையினர் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்காக பலத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும், புதிய ஆஃபர்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், தற்பொழுது பிஎஸ்என்எல் நிறுவனமும், தன் பங்கிற்கு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்தியாவின் ஜம்மூ-காஷ்மீர் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தவிர்த்து பிற அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும் விதமாக இந்த அறிவிப்பானது வழங்கப்பட்டு உள்ளது. 599 ரூபாய்க்கு ப்ரீப்பெய்ட் ரீசார்ஜ் மூலம் இந்த வசதியினைப் பெற இயலும்.
இந்த ஆஃபரில், ஒரு நாளைக்கு அதிவேக டேட்டாவானது 5ஜிபி அளவிற்கு வழங்கப்பட உள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை அனுப்ப இயலும். இலவச எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஆபருக்கு 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு உள்ளது. இதனை STV COMBO599 என்ற கோடினை 123 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்புவதன் மூலம், பெற இயலும். அதே போல், ரீசார்ஜ் கூப்பன் மூலம் இந்த ஆஃபரினைப் பெற இயலும்.