மீண்டும் 777 ரூபாய் திட்டம்! பிஎஸ்என்எல் இஸ் பேக்!

17 September 2019 தொழில்நுட்பம்
bsnl.jpg

பழைய ஆஃபர் திட்டங்களை தூசி தட்டி எடுக்க ஆரம்பித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். தற்பொழுது, அது ரத்து செய்த ஆஃபர் ஒன்றினை, மீண்டும் வழங்க முடிவு செய்துள்ளது.

தொலைத் தொடர்புத் துறையில் நிகழும் நெருக்கடியின் காரணமாகவும், போட்டியாளர்களை சமாளிக்கும் வகையிலும், பிஎஸ்என்எல் நிறுவனம், பல்வேறு புதிய திட்டங்களையும், வசதிகளையும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, வருகிறது.

இந்நிலையில், தற்பொழுது பழைய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த உள்ளது. அதன்படி லேண்ட்லைன் மூலம், இணைய சேவைப் பெறும் வாடிக்கையாளர்கள், 777 ரூபாய் திட்டத்தில் இணைந்து மாதம் 500 ஜிபி டேட்டா வரை எவ்விதப் பிரச்சனையும் இன்றி, பெற இயலும். இதன் வேகம் சுமார் 50 எம்பிபிஎஸ். 500ஜிபி டேட்டா முடிந்த பின், அதன் வேகம் 20 எம்பிபிஎஸ் ஆக மாறிவிடும்.

இந்த அதிரடி சலுகை, சுமார் ஆறு மாதங்களுக்கு வழங்க உள்ளது பிஎஸ்என்எல். பின்னர், 777 ரூபாயானது, 849 ரூபாயாக மாற்றப்படும். அப்பொழுது, 500 ஜிபிக்கு பதில், 600 ஜிபி வழங்கப்படும். அதுவும் 60 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும். 600 ஜிபியைக் கடந்ததும், அதன் வேகம் 20 எம்பிபிஎஸ் ஆக குறைந்து விடும். இந்த சலுகையால், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்.

HOT NEWS