போட்டுத் தாக்கிய புல்புல் புயல்! 10 பேர் பலி! பல ஆயிரம் வீடுகள் சேதம்!

11 November 2019 அரசியல்
bulbulcyclone.jpg

தீவிர நிலைமையில் இருந்து, அதிதீவிர புயலாக மாறிய புல்புல் புயல், நேற்று மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக, அங்கு அதிக வேகத்துடன் புயல் காற்று வீசியது.

இதனால், சுமார் 2.75 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளயாகி உள்ளன. ஏறக்குறைய 10 பேர் இந்த புயலால் இறந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்பொழுது வரை வெளியாகவில்லை. மேலும், இந்தப் புயல் தற்பொழுது வங்கதேசத்தினை நோக்கிப் பயணித்துள்ளது.

1.78 பேர் தற்பொழுது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ உதவி மற்றும் உடை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு மேற்கு வங்க முதல்வர் செல்வி. மம்மதா பேனர்ஜி ஆய்வு செய்தார்.

இந்தப் புயல் குறித்து, டிவீட் செய்துள்ள பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தப் புயல் குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜியுடன் தற்பொழுது பேசினேன். மேற்கு வங்க மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்து தரும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

HOT NEWS