புதிதாக உருவாகி உள்ள புல்புல் புயல்! மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்!

08 November 2019 அரசியல்
bulbul.jpg

இந்தியாவிற்குப் பருவ மழையானது பெய்கின்றதோ, இல்லையோ, இந்த புயல் மழைக்கு மட்டும் பஞ்சம் இருந்ததில்லை. தற்பொழுது தான், மஹா புயலானது கரையை கடந்தது. மேலும், அது வலுக் குறைந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில், தற்பொழுது புதிய புயல் ஒன்று அரபிக்கடலில் உருவாகி வருகின்றது.

புல்புல் என்றுப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் புயலானது, முதலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக இருந்தது. தொடர்ந்து, அதன் வலிமை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து, தற்பொழுது அது புயல் சின்னமாக மாறியுள்ளது. இந்த புல்புல் புயலானது, தீவிர புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புயலானது, இன்று 90 கிலோ மீட்டர் வேகத்தில் ஒடிசாவில் பலத்தக் காற்றினை வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் புயலானது, கொல்கத்தாவில் இருந்து சுமார், 930 கிலோ மீட்டர் தொலைவில் தற்பொழுது மையம் கொண்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவும், ஒடிசாவின் கடற்கரைப் பகுதியிலும், சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரித்துள்ளது தேசிய வானிலை கண்காணிப்பு மையம்.

HOT NEWS