பொது இடங்களில் பர்தா அணிய தடை விதித்த நாடு!

02 July 2019 அரசியல்
burqa-banned.jpg

இனிப் பொது இடங்களில் பர்தா அணியக் கூடாது என, நெதர்லாந்து தடை விதித்துள்ளது. இனி அந்த நாட்டில், பொது இடங்களில் பர்தா அணிந்தால், சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மிகவும் சர்ச்சைக்குரிய இந்த விஷயத்தைக் கடந்த ஆண்டு கடுமையாக விவாதித்து, பின் சட்டமாக மாற்றியுள்ளது. பின்னர், வியாழக்கிழமை அன்று இதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி, முகத்தை முழுவதுமாக மறைக்கும் பர்தா, முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஹெல்மெட் மற்றும் பிற உடைகளையும், தடை செய்துள்ளது.

இதனை மீறினால், 150 யூரோ அபராதம் விதிக்கப்படும் என, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், அங்குள்ள இஸ்லாமியர்கள் அதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இனி மேல், முகத்தை முழுமையாக மறைக்கும் உடைகளை அணிந்து, பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பொது இடங்கள், போக்குவரத்து இடங்கள் ஆகியவைகளுக்குச் செல்லக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.

HOT NEWS