மாணவர்களின் போராட்டத்திற்குப் பணிந்தது ஐசிஏஐ!

27 September 2019 அரசியல்
castudents.jpg

ஐசிஏஐ எனப்படும் இன்ஸ்ட்டியூட் ஆஃப் சார்ட்டட் அக்கவுண்ட் ஆஃப் இந்தியா பல்கலைக் கழக்கத்தில் படித்து வந்த மாணவர்கள், திடீரெனப் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் தங்களுடைய விடைத் தாட்களை ஐசிஏஐயைத் தவிர்த்து, சுதந்திரமான குழு மறுதிருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரிக்க விடுத்தனர்.

இதற்காக, சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள், காலை 11 மணியில் இருந்து, மாலை 5 மணி வரைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், நாங்கள் நன்றாகத் தேர்வு எழுதியும் சரியாக யாரும் திருத்துவதில்லை. மேலும், எங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விடைத்தாளைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனை மாற்றக் கோரியும், இது குறித்து ஆய்வு செய்ய புதிய சுதந்திரமான குழு அமைக்கக் கோரியும், போராட்டம் நடத்தி வருகின்றோம்.

காலையில் இருந்து, இந்தப் போராட்டத்தினை நடத்தி வருகின்றோம். இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இதில் பலர் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஆதரவு திரட்டி வருகின்றனர் என்று கூறினர்.

இப்பிரச்சனைக்கு, காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான, ராகுல் காந்தியும் தன்னுடைய ஆதரவினை அளித்தார். இதனைத் தொடர்ந்து, அவர்களுடையக் கோரிக்கையை ஏற்று, 5 பேர் கொண்டு சிறப்புக் குழு ஒன்றினை அமைத்து உத்தரவிட்டுள்ளது ஐசிஏஐ நிறுவனம். இந்த உத்தரவினை அடுத்து, போராட்டத்தைக் கைவிடுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS