சிஆர்பிஎப் வீரர்களுக்கு புல்லட்ப்ரூப் உடைகள் வாகனங்கள்! அமைச்சரவை ஒப்புதல்!

02 June 2020 அரசியல்
bulletproofcar.jpg

இந்தியாவில் உள்ள சிஆர்பிஎப் வீரர்களுக்கு குண்டுதுளைக்காத காவச உடைகளும், வாகனங்களும் வழங்க, மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியா முழுவதும் பல ஆயிரம் வீரர்கள் சிஆர்பிஎப் எனப்படும், மத்திய ரிசர்வ் படையில் உள்ளனர். அவர்களில் எப்பொழுதும் பதற்றமாக இருக்கும் காஷ்மீர் பகுதியில் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு பாதுகாப்பான உடைகள் கிடையாது. சாதாரண போலீஸ் உடுத்துகின்ற உடையினையே அவர்களும் உடுத்துகின்றனர். இதனால், துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதல்களில் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கவச உடைகளையும், கவச வாகனங்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெகு காலமாக முன் வைக்கப்பட்டு வருகின்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்பொழுது அவர்களுக்கு புல்லட் ப்ரூப் எனப்படும் குண்டு துளைக்காத கவச ஆடைகளும், குண்டு துளைக்காத கவச வாகனங்களும் வழங்க மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக, முதற்கட்டமாக 42,000 புல்லட் ப்ரூப் உடைகளும், 176 வாகனங்களும் வழங்கப்பட உள்ளன.

விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இந்த 176 வாகனங்களும் ஆறு பேர் வரை, அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. இந்த வாகனங்கள், சிறிய ரக வெடிகுண்டுகள், மற்றும் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்க்கும் திறன் உடையதாக உருவாக்கப்படும்.

HOT NEWS