அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரலாறு காணாத காட்டுத் தீயால், அப்பகுதி முழுவதும் நரகம் போல் காட்சியளிக்கின்றது. இந்தத் தீயால் 11 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் வருடா வருடம், காட்டுத் தீயானது பரவும். இதனால், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் காடுகளில் தீ விபத்து உண்டாகும். ஆனால், இந்த ஆண்டு எப்பொழுதும் இல்லாத வகையில், பல லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள காடுகளில், தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இது எப்படி உருவானது என, யாருக்கும் தெரியவில்லை. இது எந்தத் திசையில் பயணிக்கின்றது எனக் கணிப்பதற்குள் இதன் வேகம் மிக அதிகமாக உள்ளது. இதனை அணைக்கும் முயற்சியில் பல நூறு தீயணைப்பு வீரர்கள், கடுமையாகப் போராடி வருகின்றனர்.
இருப்பினும், இந்தத் தீயானது கட்டுக்குள் வரவில்லை. இந்தத் தீயால், கலிபோர்னியாவின் 4 நகரங்கள் மிகக் கடுமையாகக் காட்சியளிக்கின்றன. வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது. நூற்றுக்கணக்கானோர் இந்த தீயின் காரணமாக, தங்களுடைய வீடுகளை இழந்துள்ளனர். இந்த தீயால் வரும் புகையானது, 40,000 அடி உயரத்திற்கு பரவி உள்ளது.
இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற 11 பேர், பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் தற்பொழுது தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், இந்தக் காட்டுத் தீ விவகாரமானது விஸ்வரூபம் எடுத்து உள்ளது.