விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு! அமைதி காக்கும் மோடி அரசு!

02 December 2020 அரசியல்
justintrudeaufarmers.jpg

இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்ற விவசாயிகள் போராட்டத்திற்கு, கனடா பிரதமர் தன்னுடைய ஆதரவினைத் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு இந்த ஆண்டு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியின் நுழைவு வாயில்களில் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்பினைக் காட்டும் விதமாகக் லட்சக்கணக்கில் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தப் போராட்டத்தின் முதற்கட்டப் பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிவடைந்து உள்ளது. இந்த சூழலில், இந்தப் போராட்டம் குறித்து, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்து உள்ளார். அவர் இது குறித்து பேசுகையில், அமைதியாகப் போராடும் விவசாயிகளுக்கு எங்களின் முழுமையான ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களை நினைத்துக் கவலைக் கொள்கின்றேன்.

இது குறித்து, இந்திய அரசிற்கும் தன்னுடைய தகவலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றுக் கூறியுள்ளார். பல செய்தி நிறுவனங்கள், இந்த விவசாயிகள் போராட்டத்தினை இருட்டடிப்பு செய்து வருகின்ற நிலையில், கனடா பிரதமர் இது குறித்து பேசியிருப்பது பெரிய விஷயமாகவேப் பார்க்கப்படுகின்றது.

HOT NEWS