சாதியப் பாகுபாடு பார்க்கின்றதா டிவிட்டர்?

08 November 2019 அரசியல்
twitter.jpg

சமூக வலை தளங்களில், உலக அளவில் பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு அடுத்ததாக பயன்படுத்தப்படும் வலைதளம் என்றால், அது டிவிட்டர்.

அதில் பல கோடி பேர், தங்களுடையக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதில், சமூகப் பிரச்சனைகள் முதல் கட்டிலில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் வரையிலும் உலா வருகின்றன.

இந்நிலையில், டிவிட்டர் மீது புகார் கூறி, புதிய டிரெண்டிங் ஒன்று உலா வருகின்றது. டிவிட்டரில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளுக்கு, ப்ளூ டிக் வழங்குவது வழக்கம். அதில் தற்பொழுது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ப்ளூ டிக் வழங்குவதில், டிவிட்டர் நிறுவனம் சாதியப் பாகுபாடு பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது.

paranjithtwitter.jpg

#cancelallBlueTicksinIndia என்ற ஹேஸ்டேக்கில் பலரும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். புதிதாக கணக்குத் தொடங்கும் பிரபலங்களில், உயர் வகுப்பினருக்கு உடனடியாக, ப்ளூ டிக் வழங்கப்படுவதாகவும், எஸ்சி,எஸ்டி, மற்ற பிற வகுப்பினருக்கு ப்ளூ டிக் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் டிவிட்டரில் நிலவி வருகின்றது.

பா ரஞ்சித் உட்பட, பலப் பிரபலங்களுக்கு பல லட்சம் பாலோவர்கள் இருந்தும், இன்னும் ப்ளூ டிக் வழங்கப்படவில்லை. ஆனால், சென்ற மாதம் புதிதாக கணக்குத் தொடங்கிய அரசியல் பிரபலங்களுக்கு உடனடியாக, ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள டிவிட்டர் செய்தி தொடர்பாளர், டிவிட்டர் எவ்விதப் பாகுபாடும் பார்ப்பதில்லை எனவும், ஏற்கனவே உள்ள விதிகளின் படியே, அனைத்தும் பின்பற்றப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

HOT NEWS