கேப்மாரி திரைவிமர்சனம்!

16 December 2019 சினிமா
capmaari.jpg

படத்தின் பெயரைப் பார்த்துவிட்டு, ஜெய் படம் நல்ல காமெடியாக இருக்கும் என நினைத்துப் போனால், அது மிட்நைட் மசாலாப் படம் போல எடுத்து இருக்கின்றார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

பிள்ளை விஜய்யோ, பெண்கள் முன்னேற்றம் பற்றி, பிகில் படம் நடித்தால், தந்தையோ, பெண்களை எப்படி கரெக்ட் செய்வது எனப் படம் எடுத்து வெறுப்பேற்றுகின்றார்.

ஒன்னுமில்லாத கதைக்கு இரண்டு ஹரோயின்கள் வேறு. இந்தப் படத்தினை எதற்காக, ஜெய் தேர்வு செய்தார் என்பது இன்னும் தெரியவில்லை. எஸ்.ஏ.சி இயக்குவதால் நடித்தாரா, அல்லது படமே இல்லை என்பதற்காக நடித்தாரா எனவும் தெரியவில்லை. ஆனால், அவருடையத் தேர்வு மிக மோஷம் தான். படத்தில் அவருடைய நடிப்பு மிக மோசம்.

ரயிலில் பயணம் செய்யும் சகப் பெண்மணியான வைபவிக்கு, மது கொடுத்துப் போதையேற்றுகிறார் ஜெய். பின், அப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கின்றார். பின்னர், இரண்டு ஆண்டுகள் கழிந்த பின், மீண்டும் வைபவியைப் பார்க்கின்றார். இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனிடையே, ஜெய் வேலைப் பார்க்கும் அலுவலகத்தில், அதுல்யா வேலை செய்கின்றார். அவர், ஜெய்யை காதலிக்கின்றார். ஒரு நாள், அவரை வீட்டில் இறக்கி விடச் செல்லும் போது, அதுல்யா வீட்டில், இருவரும் சரக்கடிக்கின்றனர். பின்னர், போதையிலேயே இருவரும் உடலுறவு வைத்துக் கொள்கின்றனர்.

அவ்வளவு தான். இரண்டு பேருடனும், ஒரே வீட்டில் தங்குகின்றார். மூவருக்கும் நடக்கும் பிரச்சனை, கடைசியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதிக் கதை. இதையெல்லாம் கதையா எனக் கேட்கும் அளவிற்கு, படம் மிக மோசமாக எடுக்கப்பட்டு உள்ளது. இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி என்றப் பெயரில் ஆபாசங்கள் எனப் படம், குழந்தைகளுடனோ அல்லது குடும்பத்துடனோ பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது.

கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லையோ என, நம்மையே யோசிக்க வைக்கின்றனர். எது எப்படியோ, ஜெய் நடித்துள்ள தோல்விப் படங்களின் வரிசையில், இதுவும் சேர்ந்து கொள்கின்றது. படத்தில் எந்தப் பாடல்களும் ஹிட்டாகவில்லை. சரியான காமெடியும் இல்லை. இதனை எதற்காக, எஸ்.ஏ.சி. இயக்கினார் என, பலரும் கேள்வி கேட்கின்றனர்.

மொத்தத்தில் கேப்மாரி திரைப்படம் காறி துப்புறமாரி இருக்கு.

ரேட்டிங்: 1/5

HOT NEWS