13 அமெரிக்க செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது கர்ட்டோசாட்-3!

27 November 2019 அரசியல்
pslvc47.jpg

இன்று காலையில், 13 அமெரிக்க செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி கார்ட்டோசாட்-3 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதனை இஸ்ரோவின் தலைவர் திரு சிவன் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான இஸ்ரோ, பல செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியுள்ளது. தற்பொழுது, பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் இந்த முறைப் பயன்படுத்தப்பட்டது.

இது முழுக்க முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்தியாவின் கார்ட்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 விதமான நேனோ சேட்டிலைட்டுகளை விண்ணிற்கு அனுப்பியது.

சுமார் 9.28 மணியளவில், 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட பிஎஸ்எல்வி-சி47 என்ற ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. சுமார் 1625 கிலோகிராம் எடை கொண்ட இந்திய செயற்கைக்கோளான, காட்டோசாட்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் மூலம் பானாகுரோமேட்டிக் முறையில், தரையில் இருந்து 0.25 மீட்டர் உயரத்தில் உள்ளவைகளைப் புகைப்படம் எடுக்க இயலும். மேலும், 4 பேண்ட் மல்டி ஸ்பெக்ரல் மோட்ஸ் முறையில் தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் இருக்கும், பொருட்களை தெளிவாகவும் இந்த செயற்கைக் கோளினைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்க இயலும்.

HOT NEWS