பிரபலங்கள் மீது புகார்! தேச துரோக சட்டம் பாய்ந்தது!

05 October 2019 அரசியல்
ccva16.jpg

சிறுபான்மையினருக்கு எதிராக, நாடு முழுவதும் அத்துமீறல்கள் நடப்பதாக, இந்தியாவின் 49 பிரபலங்கள், பாரதப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அதில் அவர்கள், சமீபகாலமாக நம் இந்திய நாட்டில், சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லியும் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால், கருத்து வேறுபாடு உள்ளவர்களை நக்சல்கள் என்றும் ஆன்டி இந்தியன் எனவும் கூறப்படுகின்றனர் என கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் மாநிலத்தில் உள்ள முசாப்பூர் நகரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், அவர்கள் எழுதியக் கடிதம் நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போன்று உள்ளது. மேலும், பிரதமரின் செயலையும், பணியையும் குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது எனவும், அதன் காரணமாக, அவர்கள் மீது குற்றப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

இதனை ஏற்ற நீதிபதி, வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனால், தேசத் துரோக வழக்கு, பொது மக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

HOT NEWS