பதஞ்சலி மீது வழக்கு! காய்ச்சல் சளிக்கு மருந்து தயாரிக்கவே அனுமதி!

24 June 2020 அரசியல்
coronil.jpg

காய்ச்சல் மற்றும் சளிக்கு மருந்து தயாரிப்பதாக கூறி அனுமதி வாங்கிய பதஞ்சலி நிறுவனம், தற்பொழுது கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளதால், அந்த நிறுவனத்தின் மீது ஹரித்துவாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

உத்ரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் உள்ளது பதஞ்சலி நிறுவனம். இந்த நிறுவனம், பல ஆயுர்வேதப் பொருட்களைத் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றது. அந்த நிறுவனம், தற்பொழுது அதிரடியாக புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதன்படி, உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு தாங்கள் இரண்டு மருந்துகளைக் கண்டுபிடித்து உள்ளதாகவும், அதனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் விளம்பரப்படுத்தியது.

இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று கொரோனநில் மற்றும் சுவாசரி என்ற இரண்டு புதிய மருந்துகளை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த மருந்தினை, எவ்வித சோதனைக்கும் உட்படுத்தாமல், நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது பதஞ்சலி.

இதனை இந்திய ஆயுர்வேத மருத்துவத்துறை கண்டித்துள்ளது. எவ்வித சோதனைக்கும் அம்மருந்தினை உட்படுத்தாமல் அவர்கள் இவ்வாறு செய்துள்ளதை எதிர்த்தும் உள்ளது. மேலும், இந்த மருந்தினை விளம்பரம் செய்ய, தடையும் விதித்துள்ளது. இந்நிலையில், சளி மற்றும் காய்ச்சலுக்காக மருந்து தயாரிக்க உள்ளோம் என்றுக் கூறி, தற்பொழுது கொரோனாவிற்கு மருந்து தயாரித்துள்ளதாக, உத்ரகாண்ட் அரசு கூறியுள்ளது.

மேலும், இந்த விஷயத்தின் காரணமாக, பதஞ்சலி நிறுவனத்தின் மீது வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. எவ்வித சோதனையோ, ஆய்வுக்கோ உட்படுத்தாமல், நேரடியாக மக்களின் பயன்பாட்டிற்கு இந்த மருந்து வந்துள்ளதைப் பலரும் கண்டித்துள்ளனர்.

HOT NEWS